இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் அந்த குரூப் ஆ.. வெளியான ஓட்டிங் விவரம்..!

Author: Vignesh
29 December 2023, 1:36 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

இந்தநிலையில், இந்த வாரம் எலிமினேஷன் யாரென்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, இந்த வாரத்திற்கான நாமினேஷனில், நிக்சன், மணி, தினேஷ், ரவீனா, மாயா கிருஷ்ணன், விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் உள்ளனர்.

maya

இதில், மக்களிடமிருந்து அதிகமான வாக்குகள் பெற்று விஷ்ணு முன்னிலையில் இருக்கிறார். அதேபோல, மக்களிடமிருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மாயா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மாயாவை போலவே நிக்சனுக்கும் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது. ஆகையால், இவர்களில் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…