பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றிருந்தவர் தான் சீரியல் நடிகரான அர்னவ். இவர் தன்னுடைய காதலியான அன்சிதாவுடன் பிக் பாஸ் வீட்டில் பங்கேற்றது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
முன்னதாக சீரியல் நடிகையான திவ்யா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பம் ஆக்கிவிட்டு திவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில் அவரை ஏமாற்றிவிட்டு வேறொரு சீரியல் நடிகையான அன்ஷிகாவுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு அவரிடம் சென்று விட்டார்.
இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருப்பது மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதனால் அவருக்கு மக்கள் ஆரம்பத்தில் இருந்து ஆதரவு கொடுக்கவில்லை . மாறாக அவரை கடுமையாக விமர்சித்து தான் வந்தார்கள்.
விஷயம் இப்படி இருக்க நாளுக்கு நாள் ஏர்னவ் பெயரை மட்டுமே பிக்பாஸ் வீட்டில் சம்பாதித்தார். மேலும் குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் இருந்த போட்டியாளர்களை ஜால்ரா எனக்கூறி கடுமையாக திட்டினார் .
விஜய் சேதுபதி முன்னே அர்னவ் இப்படி பேசியதால் விஜய் சேதுபதி என்னுடைய ஹவுஸ் மேட்சை இப்படி பேசக்கூடாது அர்னவ், இது கருத்து சொல்ற இடம்… வன்மத்தை கக்குற இடம் இல்லை என கண்டித்தார். இப்படியாக வீட்டில் உள்ளேயும் வீட்டில் வெளியே வந்த பிறகும் அர்னவ் கடுமையான சர்ச்சைகளை சந்தித்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்: உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது… நடிகை அனன்யாவா இது? லேட்டஸ்ட் போட்டோஸ்!
அர்னவ்விற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது அதன்படி அவர் 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதனால் 2.8 முதல் 3.5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எவ்வளவு சர்ச்சை, பிரச்சனை, அவமானம், அசிங்கப்பட்டாலும் இவ்வளவு பணத்தை வாரிக் கொண்டு அர்னவ் வெளியேறினாரா? என ஆடியன்ஸ் அதிர்ந்து போய் விட்டார்கள்.