பிக் பாஸ் சீசன் 8 ஆடிஷன் தொடங்கியாச்சு.. சர்ச்சை பிரபலத்தை களமிறக்கும் விஜய் டிவி..!
Author: Vignesh11 June 2024, 7:27 pm
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் -க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, நடந்து முடிந்த ஏழாம் சீசன் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. கமல்ஹாசனே மாயா பூர்ணிமா கேங்கிற்கு ஆதரவாக செயல்படுகிறார். ரெக்கார்ட் கொடுத்தது போன்ற கடுமையான விமர்சனங்களை கமலஹாசன் சந்தித்தார்.

மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!
பலரும் சமூக வலைதளங்களை கமலஹாசனை ட்ரோல் செய்தனர். இதற்கிடையில், தற்போது, பிக் பாஸ் எட்டாம் சீசனுக்கான பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலையை தொடங்கி இருக்கிறதாம். பல்வேறு சர்ச்சைகளில் சிறைக்கு சென்று வந்த டிடிஎஃப் வாசனையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!
அவரது, காதலி ஷாலின் சோயாவிற்கும் தற்போது, அந்த வாய்ப்பு வந்திருக்கிறதாம். ஷாலின் ஸோயா தற்போது, குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருக்கையில் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அதனால் மற்றும் அவர் காதலை ஸ்டாலின் சோயா ஆகிய இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 34 வருட சினிமா வாழ்க்கை.. 58 வயது நடிப்பு அரக்கன் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவுதானாம்..!