பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா? உண்மையா இதுதான் அங்க நடந்துச்சு.. நெத்தியடி பதில் சொன்ன ஆஜித்..!

Author: Vignesh
4 October 2022, 4:01 pm

காதல் குறித்த சர்ச்சைக்கு ஆஜித் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கேபிரில்லா மற்றும் ஆஜித். இவர்கள் இருவருமே இந்த நிகழ்ச்சிக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் பங்கேற்று நடனம் ஆடிருந்தார்கள். ஆஜீத் பிரபலமான டான்ஸர் மட்டுமில்லாமல் மிகப் பிரபலமான பாடகரும் ஆவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித்-கேபிரில்லா:

அதோடு இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் படங்களில் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும், இவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாகியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அது மட்டும் இல்லாமல் வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு காதல் ஜோடி குறித்த சர்ச்சை எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஆஜித் மற்றும் கேபிரில்லா இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது காதலிக்கிறார்கள் என்று செய்தி சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆஜித்- கேபிரில்லா குறித்த தகவல்:

இருந்தாலும், இவர்கள் இருவரும் இதைப் பற்றி பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆஜித் தன்னுடைய கேரியரியில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் கேபிரில்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருந்தாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆஜித் அளித்த பேட்டி:

இதனால் இவர்கள் இருவருமே காதலிக்கிறார்கள் என்று செய்திகள் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து ஆஜித் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பிக் பாஸ் வீட்டில் அதிகம் சண்டை போட்டது நானும் கேப்ரில்லாவும் தான். ஆனால், எங்கள் சண்டையை அவர்கள் காண்பிக்கவில்லை.

காதல் குறித்து ஆஜித் சொன்னது:

சண்டை போட்டாலும் நாங்கள் உடனே சேர்ந்து விடுவோம். எங்கள் இருவருக்கும் எப்போதுமே காதல் ஏற்பட்டதில்லை. சொல்ல போனால், நாங்கள் இருவரும் அண்ணன் – தங்கை போல் தான் பழகி வருகிறோம் என்று கூறினார். இப்படி இவர் அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதிலிருந்து இனி இவர்கள் இருவரின் நட்பு குறித்து தவறாக பேச மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 548

    0

    0