மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா பிக் பாஸ் பிரபலம் அபிநய்..?

Author: Rajesh
28 February 2022, 5:53 pm

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அபிநய். இவர் சென்னை 28, பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பாவனிக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சையின் காரணமாக அபிநய்யை விட்டு, அவரது மனைவி அபர்ணா பிரிக்கிறார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், அபிநய்யின் மனைவி, தனது கணவரின் பெயரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார். ஆனால், இது வெறும் வதந்திதான் என்றும் அபிநய் தெரிவித்திருந்தார்.

பின்னர், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக அபிநய் களமிறங்கினார். ஆனால், தீடீரென பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அபிநய்யிடம், ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அபிநய், ‘ இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ‘ என்று தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!