“நடக்கலனு சொல்லல.. எனக்கு நடக்கலனு சொல்றேன்”… வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்ட அபிராமி..! (வீடியோ)
Author: Vignesh7 April 2023, 3:30 pm
சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அபிராமி வெங்கடாசலம் கலாக்ஷேத்ரா விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரை சந்தித்து கலாக்ஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, கல்லூரிக்கு எதிராக செயல்பட வேண்டும் என அறிவுரை கூறினர். ஆனால், நான் அதை மறுத்து விட்டேன். பிறகு அந்த ஆவணங்களை காவல் ஆணையரிடம் தெரிவிக்க வந்தேன், எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது :- நான் 2015 முதல் 2019 வரை கலாஷோத்ரா கல்லூரியில் பயன்றேன். கல்லூரி படிக்கும் பொழுது இது போன்ற பாலியல் துன்புறுத்தல் எதுவும் கிடையாது. நான் கலாஷேத்ரா விவகாரம் பற்றி பேசியதற்கு நான் பப்ளிசிட்டி பெறுவதாக பேசுகிறேன் என பல்வேறு நபர்கள் கூறினார்கள்.
நிர்மலா என்ற ஆசிரியர் எனது தோழி மூலமாக தொலைபேசி மூலம் அழைத்து கல்லூரிக்கு எதிராக செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் நான் அதை மருத்துவிட்டேன். நிம்மி என்ற ஆசிரியர் நான் கோயம்புத்தூர் சென்று, திரும்பும் போது தொலைபேசி மூலம் அழைப்பு கொடுத்ததனர். லிலா எனும் பேராசிரியர் கல்லூரி மாணவிகளை தூண்டிவிட்டு கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.
பேராசிரியர் ஹரி பத்மனுக்கும் இந்த பாலியல் சீண்டலுக்கு ஈடுபட வாய்ப்பில்லை. பேராசிரியர் ஹரி பத்மன் எனக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர். ஹரி பத்மன் என்பவர் ஒரு நல்ல ஆசிரியர். கல்லூரியின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக நிர்மலா ராஜன், நந்தினி ஆகிய ஆசிரியர்கள் மாணவர்களை தூண்டிவிட்டு இதுபோன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், கலாஷேத்ரா நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சிலர், இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர். நான் தானே வந்து இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தேன். நான் அந்த கல்லூரியில் பயிலும் போது எனக்கு அந்த மாதிரி பாலியல் தொல்லை எதுவும் ஏற்படவில்லை.
தற்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டு இருக்கிறது என கூறப்படுகிறது. அதுபோன்று பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அதுபோல பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் இருந்தால் அதற்கு முறையாக கவனம் செலுத்த வேண்டும், எனக் கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்று தெரியாத இருந்த அபிராமி செய்தியாளர் மீது கோபத்தை திணித்தார். எனக்கு எந்த பயமும் இல்லை. எந்த தொலைக்காட்சி மற்றும் எந்த செய்தியாளர்களின் உதவியும் எனக்கு தேவையில்லை. நான் மதத்திற்காக பற்றி பேசுகிறேன் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த எண்ணங்கள் எதுவும் எனக்கு கிடையாது.
அந்த கல்லூரியில் சாதி, மதம் என்பது பற்றி பேசப்படவில்லை. நான் இந்த கல்லூரியில் 2010 – 15 வரை படித்தேன் சாதி, மதம் குறித்து எதுவும் அங்கு கிடையாது. ஆசிரியர்கள் மாணவர்கள் முறையாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது வழக்கம். ஆனால், அதற்கு எல்லாம் மாணவிகள் இது போன்று புகார் கொடுப்பது தவறு. நான் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த காரணம் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்துக்களை ஆவனங்களை சமர்ப்பிக்க வந்தேன், எனக் கூறினார்.
அப்படி எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என்றும் கலாசேத்திரா மாணவிகளை பலிகடாவாக ஆக்கப்படுகிறார்கள் என்று அபிராமி சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ரொம்பவும் மரியாதை இல்லாமல் ஆணவத்தில் ஆடியபடி பேசியிருக்கிறார் அபிராமி.
பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அதன்பின்பு கலாஷேத்ராவில் பாலியல் தொந்தரவு நடக்கவே இல்லை என தெரிவிக்கவில்லை என்றும், தனக்கு நடக்கவில்லை என்றே கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார். மாணவர்களை பேராசிரியர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று மீண்டும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பத்திரிக்கையாளர்களை அவமதித்து அவர்களையே கேள்வி கேட்டிருக்கிறார். அதன்பின் பத்திரிக்கையாளர்கள் கண்டித்ததால் அப்படியே அமைதியாகிவிட்டார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு சங்கி சங்கி என்று நெட்டிசன்களால் அபிராமி கலாய்க்கப்பட்டு வருகிறார்.
என்ன திமிரு… என்ன ஆணவம் பாருங்க… pic.twitter.com/fQHqRQPuH3
— U2 Brutus (@U2Brutus_off) April 7, 2023