அப்போ அதெல்லாம் உண்மையா? ஐஷுவுடன் காதல்.. நிரூப் வெளியிட்ட சோகமான பதிவு..!

Author: Vignesh
2 November 2023, 6:19 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்‌ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.

bigg boss 7 tamil-updatenews360

முதல் சீசனில் ஆரவ் ஓவியா கொடுத்த மருத்துவ முத்தம் பிக்பாஸ் சீசனில் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பிறகு, இப்போது ஏழாவது சீசனில் நிக்ஸன் ஐஷூ கொடுத்த முத்தம் இன்னும் வைரலாகி வருகிறது. அவர்கள் காதல் ஜோடிகளாக இணைவார்களா என மக்கள் யோசிக்கும் நேரத்தில் தனக்கு வெளிய காதலன் உள்ளான் என ஐஷூ கூறியிருக்கிறார்.

bigg boss 7 tamil-updatenews360

மேலும், காதலன் யார் யார் என சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் எழுப்பி வருகின்றன. இந்த நேரத்தில் தான் ஐஷூவின் காதலன் முன்னால் பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் என கூறப்படுகிறது. ஆனால், இது தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

niroop

நிரூப் ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமான யாஷிகாவை காதலித்து அவரை பிரிந்தார். பின்னர் அமீருடன் நெருக்கமாக பழகி வந்த இவர் ஐஷூவின் சகோதரி பிறந்தநாள் பங்க்ஷனிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நிரூப் அவரது பக்கத்தில் சோகமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ஸ்டோரியா வைத்திருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்திற்கு பார் திஸ் ரேண்டம் கிளிக் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதனால் ஐஷூவின் நடவடிக்கையை பார்த்தது இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

niroop
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 430

    0

    0