பாவினி – அமீர் காதல் Breakup? இன்ஸ்டா பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Author: Shree
11 August 2023, 1:12 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார்.

ஆனால், தற்போது ஒரு அதிர்ச்சிகரான தகவல் கிடைத்துள்ளது. ரசிகர் ஒருவர் பாவினியிடம் ” நீங்க சிங்கிளா?” என கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்துள்ளார். பாவினியின் இந்த பதில் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஒரு வேலை அமீர் பாவினியை காதலித்து ஏமாற்றி விட்டாரோ? மீண்டும் நம்பி வாழ்க்கையை தொலைச்சிட்டீங்களே பாவினி என எல்லோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 421

    0

    0