வெறும் 7 நாளுக்கு அனன்யா வாங்கிய சம்பளம்…. இவ்வளவு தானா? அதிர்ச்சியில் ஆடியன்ஸ்!
Author: Shree9 October 2023, 3:44 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இந்நிலையில் சென்ற வாரம் நாமினேஷனில் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் இடம் பெற்றனர். இதில் அனன்யா ராவ் கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் விட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்.
தற்போது அவர் வீட்டில் இருந்த 7 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அனன்யா ராவுக்கு ஒரு நாள் சம்பளமாக 12 ஆயிரம் பேசப்பட்டு 7 நாட்களுக்கு மொத்தம் 84 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இது மிகவும் கம்மியான தொகையாக பார்க்கப்பட்டு இவ்வளவு தானா? என ஆடியன்ஸ் ஷாக் ஆகிவிட்டனர்.