அன்பானவரை சந்தித்த அர்ச்சனா.. பிக் பாஸ் கோப்பையோடு சென்று சந்தித்த நபர் யார் தெரியுமா?

Author: Vignesh
20 January 2024, 10:48 am
VJ Archana - updatenews360
Quick Share

பிக்பாஸ் 7 – ல் 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டில் நுழைந்த விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். இவருக்கு, ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார். தனது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களுக்கும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக பலர் விமர்சித்து வந்த நிலையில் “எவன் என்ன சொன்னால் எனக்கென்ன” என்றவாறு குதூகலத்துடன் கொண்டாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது வாழ்க்கையில் முக்கியமான ஒருவரை அர்ச்சனா கோப்பையுடன் சந்தித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ராஜா ராணி 2 சீரியலில் வாய்ப்பை கொடுத்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னெட்-ஐ தான், அர்ச்சனா தனது குருவாக நினைக்கும் நிலையில் இயக்குனர் பிரவீனை சந்தித்து அவர் கையில் தனது பிக் பாஸ் கோப்பை கொடுத்துள்ளார்.

உங்களுடைய வழிகாட்டுதல் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றும், உங்களுடைய மாணவி நான் என்று கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தை அர்ச்சனா பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணை அர்ச்சனா காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரை எப்போ சந்திக்க போறீங்க என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 191

0

0