PR மூலமா தான் ஜெயிச்சேன்.. பகீர் ரகசியத்தை உடைத்த அர்ச்சனா..!
Author: Vignesh24 January 2024, 5:15 pm
பிக்பாஸ் 7 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார். தனது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களுக்கும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக பலர் விமர்சித்து வந்த நிலையில், இது தொடர்பாக பேசிய அர்ச்சனா பிக் பாஸில் வெற்றி பெறுவதற்கு 50 லட்சம் தர்றாங்க ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்று வைத்தால் கூட 19 கோடி வரும் இவ்வளவு செலவு செய்து வெற்றி பெறுவது சாத்தியமா? இவ்வளவு செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டதை வாங்குவதற்கு பதிலாக ஒரு கோடியை வைத்து ஒரு படத்தை இயக்கிய ஹீரோயினியாக நடித்து விடுவேனே, நான் பப்ளிக் ரெஸ்பான்ஸ் வைத்து தான் ஜெயித்தேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.