உண்மையிலே தகுதி இல்லாதவர் தான் – பூங்கொத்து கொடுத்த சிறுவனை தட்டிவிட்ட அசீம்?
Author: Shree13 March 2023, 5:20 pm
சீரியல் நடிகரான முகமது அசீம் 2012ம் ஆண்டில் நடிகை வாணி போஜனுடன் இணைந்து மாயா என்ற தனது முதல் தொடரில் அறிமுகமானார். அதன் பின்னர் பிரியமானவள், பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.
பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த ஷிவானியை கள்ளத்தனமாக காதலித்து மனைவியை விவாகரத்து செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அந்த விமர்சனத்தின் மூலம் கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு.பிக்பாஸ் 6 சீசனில் பங்கேற்று ஆங்காரமான விளையாட்டு, கோபம், மிரட்டல் என மக்களின் வெறுப்புக்கும், விமர்சனத்திற்கு ஆளாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் டைட்டில் வென்றார். அதற்கு அவர் தகுதி இல்லை என விக்ரமனின் ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் அசீம் உண்மையிலே தகுயற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். ஆம், மலேசியாவிற்கு கடை திறப்பு விழாவிற்கு சென்ற அவர் அங்கு மக்களோடு மக்களாக தன்னை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிறுவனை புறக்கணித்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வெளியாக அவரை பலரும் விமர்சித்து தள்ளியுள்ளனர்.