சாச்சனாவுக்கு என்ன ஆச்சு.. உதவி செய்த அருணை கேலி செய்யும் கேர்ள்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2024, 11:58 am

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கொஞ்சம் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இது வரை FAT MAN ரவீந்தர் மற்றும் அர்னவ் என இரண்டு போட்டியாளர்கள் வெளியே போயுள்ளனர்.

தற்போது போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் என பிரிந்துள்ளனர். அதுவும் பெண்கள் அணி ஓவராக கலாய்ப்பது பார்வையாளர்களை கடுப்பாக்கியுள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில், சாச்சனாவுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டு கதறி அழுகிறார். சுற்றியிருந்த பெண்கள் எதுவும் செய்யாமல் இருக்க, அருண் சாச்சனாவை அழைத்தக் கொண்டு கன்செனன்ஸ் ரூமுக்கு அழைத்து செல்கிறார்.

சாச்சனா கன்செசன் ரூமுக்கு போனதால் குட்நியூஸ் பார் கேர்ள்ஸ் என சக போட்டியாளர்கள் சொல்ல, சாச்சனாவை ரூமுக்கு Drop செய்துவிட்டு வருகிறேன் என கூறிய அருணை, ஒட்டுமொத்த பெண்களும் கேலி செய்து வருவது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அருண் செய்தது குற்றமா? அவரும் உள்ளே போனதால் விதிமீறல் என ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்த ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் பெண்கள் அணியை திட்டி வருகின்றனர். அருண் போனவுடன் அவர் முதுகுக்கு பின்னால் பெண்கள் குத்துகிறார்கள் என கழுவி ஊற்றி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ