அர்னவை கழட்டி விட்டாரா புதுக்காதலி? பிக் பாஸ் போட்டியாளருடன் காதல்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2024, 2:20 pm

சீரியல் நடிகர் அர்னவ், சீரியல் நடிகை திவ்ய பாரதியை காதலித்தார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு திவ்யாவை திருமணம் செய்தார்.

கர்ப்பமடைந்த திவ்யா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அதற்கு பின் திவ்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என அர்னவ் பிரிந்து சென்றார்.

Arnav Betrayed his wife Divya

இதனால் மனமுடைந்த திவ்யா, அர்னவ் குறித்துஅவ்வபோது விமர்சனம் செய்து வந்தார. ஒரு பக்கம் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அர்னவ், அன்ஷிதா நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இதையும் படியுங்க: இரவு பார்டியில் தலைக்கேறிய போதை… வாரிசு நடிகர், நடிகைகள் தள்ளாடிய காட்சி!

அதே சமயம் இருவரும் பிக் பாஸ் 8வது சீசனில் பங்கேற்றது பெரும் சர்ச்சையானது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய 2வது வாரமே அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த அன்ஷிதா நேற்று எலிமினேட் ஆனார். நேற்று வெளியேற்றப்படும் போது விஷாலுடன் அவர் நெருக்கமாக பேசியது பேசு பொருளானது.

Anshita Propose to VJ Vishal

மேலும் அன்ஷிதா வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது, விஷால் தனது செயினை கொடுத்து, இதை நான் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கொடுத்தது கிடையாது என கூறி அன்ஷிதாவிடம் கொடுத்தார்.

இதையடுத்து விஷால் காதில் அன்ஷிதா ஏதோ கூற, இருவரும் காதலைத்தான் சொல்லியுள்ளனர் என நெட்டிசன்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 110

    0

    0

    Leave a Reply