உனக்கும் எனக்கும் பகை பகைதான்.. வன்மம் குறையாமல் பிக் பாஸில் இருந்து வெளியேறியும் தொடரும் சண்டை..!

Author: Vignesh
19 January 2024, 3:51 pm

பிக்பாஸ் 7 – ல் 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டில் நுழைந்த விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். இவருக்கு, ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில், பிக் பாஸ் வரலாற்றிலே இறுதி வாரத்தில் கூட சண்டை போட்ட போட்டியாளர்கள் என்றால், இந்த சீசனை தான் சொல்வார்கள். இதனிடையே, Team A Team B என இரு அணிகளாக பிரிந்து பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் வெளியேறிய பிறகும் அதை போல் செயல்பட்டு வருகின்றனர்.

bigg boss 7 tamil-updatenews360

அதாவது, விஷ்ணு, தினேஷ், மணி போன்றவர்கள் Team b என்றால் மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம், விசித்ரா போன்றவர்கள் Team a என அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, மாயா கேங்கை ரசிகர்கள் மாயா & Gang-ஐ Bully என அழைத்து வருகின்றனர். இவர்கள் இரண்டு டீம்களாக சண்டை போட்டுக் கொண்டு வீட்டிற்குள் தான் பகையுடன் இருந்தார்கள் என்று பார்த்தால் தற்போது, வெளியேறிய பிறகும் கூட இரண்டு டீமும் தொடர்ந்து பகையைக் காட்டி வருகிறார்கள்.

bigg boss 7 tamil-updatenews360

அதாவது, விஷ்ணு, ப்ராவோ என Team b ஒரு பக்கம் பார்ட்டி வைத்து செலிப்ரேட் செய்து வருகிறார்கள். அதேபோல், மாயா, பூர்ணிமா, விசித்ரா, கானா பாலா போன்றவர்கள் வனிதாவுடன் சேர்ந்து பார்ட்டி செய்து வருகிறார்கள். இவர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், வெளியே வந்ததுக்கு அப்புறமும் கூட இப்படி தனித்தனியா செலிப்ரேட் பண்ணிக்கிறீர்களே என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?