இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார். இதில் தினேஷின் ஒரு நாள் சம்பளம் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதை கேட்டதும் தினேஷுக்கு இவ்வளவு மவுஸ் இருக்கா? என பலரும் ஆச்சர்யபட்டு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.