மீண்டும் அப்பாவான பிக்பாஸ் ஆரி… கியூட்டான போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

Author: Shree
28 August 2023, 11:45 am

நடிகர் ஆரி தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை ருசித்து உள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த நடிகர் ஆரி கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

பிக்பாஸ் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள இதற்குமுன் விளையாண்டா போட்டியாளர்களை சந்தித்து அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு சரியாக களத்தில் இறங்கினார். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரியாக அதாவது நேர்மையாக தனக்கு தெரிந்த தான் செய்தேன் என்பது போல அவர் பயணித்த விதம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போனது.

அதன் காரணமாக இவர் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார். வெளியே வந்த அவருக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் அதுஎதுவும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடித்தரவில்லை. இவர் தன்னுடைய தீவிர ரசிகையாக நதியா என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரியா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் ஆரி மீண்டும் அப்பாவாகியுள்ளார். ஆம் கடந்த ஜூன் 23ம் தேதி ஆரி – நதியா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை குழந்தையின் போட்டோவுடன் ஆரி வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ