அட இவரா.. முதன்முறையாக தனது காதலரை அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் பிரபலம்- வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
25 January 2023, 10:34 am

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்த நிலையில், ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டார்.

105 நாட்களில் ஏகப்பட்ட போட்டி, சண்டை, கோபம், நட்பு, சிரிப்பு என பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி கடந்தது. கடைசியாக வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின் என 3 பேர் இருந்தார்கள். வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இந்த பிக்பாஸ் 6 சீசன் வெற்றியாளர் தேர்வு ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்தநிலையில், ஜீ தமிழில் சத்யா என்ற தொடர் மூலம் ஆயிஷா தமிழக மக்களின் கவனத்திற்கு வந்தவர். ஆயிஷா பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு 50 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்தார்.

aysha -updatenews360

ஆயிஷா பல சர்ச்சைகள் கொண்ட பெண் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது ஆயிஷா தனது காதலன் யார் என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். காதலனை காட்டாமல் அவருடன் எடுத்த போட்டோவை மட்டும் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்கள்,

aysha -updatenews360
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!