ராஜ வாழ்க்கை வாழும் சாண்டி.. மளமளவென அதிகரித்த முழு சொத்து மதிப்பு..!
Author: Vignesh7 July 2023, 12:41 pm
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நடன நிகழ்ச்சியில், நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி. விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2வில் நடுவராகவும் பணியாற்றினார்.
நடன இயக்குனராக வலம் வந்த சாண்டி பல படங்களில் நடனம் அமைத்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடன இயக்குனராகவும், தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார்.

தமிழ் சினிமாவில், மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னட படங்களிலும், நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

தற்போது சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 55 ஆயிரம் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. தற்போது சாண்டி ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடனம் அமைத்து வருவதால் அவரின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நடனத்தை பிரதான தொழிலாக வைத்திருக்கும் சாண்டி மாஸ்டர் தற்போது வரை ஏழு கோடி ரூபாய் சொத்தை வைத்திருப்பதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.
