இந்த வன்மம் தேவையா?.. மாயாவின் தாய் குறித்து வெளியான கமெண்ட்: கொந்தளித்த அவரது தங்கை..!
Author: Vignesh14 December 2023, 1:30 pm
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.

தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக இருந்து வரும் மாயாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு மொத்தம் மூன்று சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மாயாவின் தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரிகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
சமீபத்தில் மாயாவின் சகோதரி எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவு போட அதற்கு கீழ் ஒரு ரசிகர் அம்மா எப்படி இருக்கிறார்கள் என கேட்டுள்ளார். நலமுடன் இருக்கிறார் விரைவில், உங்களை டிவியில் சந்திக்கிறோம் என்று பதில் கொடுத்திருந்தார். அதற்கு கீழ் இன்னொரு பதிவில், இன்னுமா அந்த அம்மா சாகாமல் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருந்தார் ஒருவர்.
இதனால், கோபமடைந்த மாயாவின் சகோதரி இந்த வன்மம் தேவையா எங்கள் தாயைப் பற்றி நீங்கள் பேசும் பொழுது உன்னுடைய தாயை பற்றி நினைத்து பார்த்தாயா நிகழ்ச்சியில், கெட்டவர்களாக காட்டப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம். உள்ளே நல்லவர்களாக இருப்பவர் வெளியே கேடுகெட்டவர்களாக கூட இருக்கலாம். பிக் பாஸில் அறுபது கேமராக்களில் பதிவாகி வரும் காட்சிகள் 20 சதவீதம் மட்டுமே உண்மை. இதனால், உங்களுடைய வன்மத்தை போட்டியாளர்களுக்கு போடும் ஓட்டுகளில் காண்பியுங்கள் என்று கூறியிருக்கிறார்.