தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.
இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது. தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் ரக்ஷிதா அவரை ஏற்றுக்கொள்வதாகவே தெரியவில்லை.
பின்னர் தினேஷ் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது பிரிந்து சென்ற மனைவி ரக்ஷிதா குறித்து பல முறை பேசியிருக்கிறார். தினேஷ் எப்படியாவது ரக்ஷிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையை தான் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.
அதன் வகையில் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் ரக்ஷிதாவை சந்தித்து மீண்டும் சேருவது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது அதை உறுதி படுத்தும் வகையில் ரக்ஷிதா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதாவது, புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ் நோ’ தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும், தெரியாத பொண்ணா இருந்தாலும், Girl Friend ஆக இருந்தாலும் , Lover ஆக இருந்தாலும், Sex worker ஆக இருந்தாலும், ஏன் மனைவியாக இருந்தாலும் அவங்க No சொன்னால் No தான் #NO MEANS NO என காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்தால் தினேஷ் அந்த அளவுக்கு ரச்சிதாவிடம் நடந்துகொண்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.