3 வயசிலே அப்பா விட்டு போயிட்டாரு… அம்மா அந்த தொழில் செய்து காப்பாத்துனாங்க – ஷெரின் உருக்கம்!

Author: Shree
26 June 2023, 5:14 pm

அழகிய நடிகையான ஷெரின் பெங்களூரில் பிறந்து வளர்ந்து இளமை பருவத்திலேயே அதாவது பள்ளி படிப்பை நிறைவு செய்வதற்கு முன்னே நடிக்க வந்துவிட்டார். குறும்பா வறுமையாலும் அம்மா பட்ட கஷ்டத்தை பார்க்க முடியாமலும் பணத்தேவைக்காக நடிக்க வந்த ஷெரின் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் 16 வயதில் இவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.

sherin shringar - updatenews360

அதன் பிறகு, இந்தி, தமிழ் மலையாள திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இவரது முதல் தமிழ் படமான துள்ளுவதோ இளமை மூலம் புகழ் பெற்றார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் .

sherin shringar - updatenews360

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸில் பங்கேற்பதற்கு முன்னர் காதல் தோல்வியின் வருத்தத்தில் இருந்ததாகவும், தான் தனது நீண்ட நாள் காதலரை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்ததால், தினமும் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்ததாகவும், அதனை மறக்கவும் மன அழுத்தத்திலிருந்து வெளியேறவும், பிக்பாஸில் கலந்து கொண்டதாக ஷெரின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டையை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆறுதல் கூறினர்.

sherin shringar - updatenews360

இந்நிலையில் தற்போதைய பேட்டி ஒன்றில் என்னுடைய அப்பா 3 வயதிலே எங்களை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு அம்மா சிங்கிள் பெற்றோராக என்னை மிகவும் நன்றாக வளர்த்தார். எனக்கு அப்பா இல்லை என கவலையை அவர் கொடுக்கவே இல்லை. எனக்கு தேவையான அனைத்தையும் அவர் கஷ்டப்பட்டு உழைத்து பார்த்து பார்த்து செய்தார். என் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரே நேரத்தில் 4 விதமான வேலைகளை செய்து என்னை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி இந்த அளவுக்கு கொண்டுவந்தார். அவரது கஷ்டங்களை பார்த்து தான் சீக்கிரமே வேளைக்கு செல்ல முடிவெடுத்து சினிமாவில் நுழைந்தேன். பின்னர் என்னால் முடிந்த உதவிகளை செய்து நான் இப்போது அம்மாவை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறேன் என உருக்கமாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!