என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2024, 7:00 pm

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுடன் தொடர்பில் இருந்தார். இதற்கிடையில், அவர் மற்றும் விஷ்ணுவுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவாதத்தின் போது, ரவீந்தர் முத்துக்குமரனை ஆதரித்து, செளந்தர்யாவை விமர்சித்து பேசியதாகத் தெரிகிறது. இதற்கு விஷ்ணு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், விஷ்ணு ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு, ரவீந்தர் தொடர்ச்சியாக இவ்வாறு பேசுவது தவறு என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாலட்சுமி இதை ரவீந்தரிடம் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க : 2024 டாப் GROSSERS எந்த படம் தெரியுமா? வெளியானது லிஸ்ட்!

நேற்று நடந்த விவாதத்தில், ரவீந்தர் மீண்டும் முத்துக்குமரனை ஆதரித்து பேசும் போது, விஷ்ணு குறுக்கிட்டு தனது கருத்துகளை கூறினார். இதனால், ரவீந்தர், “நீ செளந்தர்யாவுக்கு பிஆர் வேலை செய்கிறாய் என தெளிவாக தெரிகிறது; ஆனால், நான் முத்துக்குமரனை ஆதரிக்கிறேன், ஏனெனில் அவர் விளையாட்டில் உண்மையாக செயல்படுகிறார்,” எனக் கூறினார்.

Vishnu Vijay Calls Ravinder Wife Mahalakshmi

மேலும், ரவீந்தர், “நீ என் மனைவிக்கு பேசிய ஆடியோ எனக்கு இருக்கிறது; அதை லீக் செய்யவா?” என விஷ்ணுவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவாதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!