ஹீரோயினாக களம் இறங்கும் பிக் பாஸ் பிரபலம்…படத்தின் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் ஸ்ருதிஹாசன்..!
Author: Selvan3 January 2025, 5:32 pm
ஹீரோயினியாக நடிக்கும் ஜனனி
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களம் இறங்கிய ஜனனி தற்போது உசுரே என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் விஜயின் காபி ஷாப்பில் நடக்கும் சண்டைக்காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார்.அதன்பின்பு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் உசுரே படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளனர்.ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இயக்குனர் நவீன் டி.கோபால் இயக்கவுள்ளார்.இப்படத்தை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்க: தளபதி69-ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்…எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா..!
மேலும் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன்,இயக்குனர் நித்திலன் சாமிநாதன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகை ஜனனியை வாழ்த்தினார்கள்.அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு எல்லோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜனனி.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் என்ன படக்குழு அறிவித்துள்ளது.