விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.
அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே, அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக, அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே, வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சில பல சர்ச்சைகள், விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த அவர் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். மகள் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா கோவாவிற்கு போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டார். பின்னர் மகளை சந்திக்க ஓடோடி வந்த வனிதா அவரை ஏர்போர்டிலே கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 60 நாட்கள் இருந்த ஜோவிகாவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம். அப்படி பார்த்தால் மொத்த சம்பளமாக ரூ. 16 லட்சம் வாங்கியுள்ளார். இதை கேள்விப்பட்டதும் நெட்டிசன்ஸ் 60 நாட்களாக தூங்கிக்கொண்டு மட்டுமே இருந்த ஜோவிகாவுக்கு இம்புட்டு சம்பளமாக என விமர்சித்தும் வந்தனர்.
படிப்பு விஷயத்தில், ஜோவிகாவை நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்திருந்தனர். தற்போது, ஜோவிகா படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு இருந்தார். விதவிதமான கவர்ச்சியடைகளை அணிந்த படி ஜோவிகா நடத்திய செம ஹாட் போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி ஜோவிகாவை பார்ப்பதற்கு குட்டி நமிதா போல் இருப்பதாக கமெண்ட்கள் செய்தும் வந்தனர்.
இந்நிலையில், ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் வனிதா சமீபத்தில் ஜோதிகாவின் கவர்ச்சி போட்டோ ஷூட்டை வெளியிட்டு பரபரப்பை கொடுத்திருந்த நிலையில், தற்போது ஜோவிகாவின் புது ஹேர் ஸ்டைலில் மாறி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.