சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் ஜூலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!
Author: Rajesh26 June 2022, 5:14 pm
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பாப்புலர் ஆகி அதன்பிறகு பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றவர் ஜூலி. அந்த ஷோவில் அவரது பெயர் அதிகமா டேமேஜ் ஆனது. அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் சின்ன ரோல்களில் நடித்தார். ஹீரோயினாகவும் நடிப்பதாக சில போஸ்டர்கள் வந்தது. ஆனால் அந்த படங்கள் பற்றி எந்த தகவலும் அதற்கு பிறகு வரவில்லை.
அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஜூலி. அந்த ஷோவுக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜூலி தற்போது ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.