நீ என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் வாய்ப்பு கிடைக்காது… பிட்டு உடையில் கவர்ச்சி லாஸ்லியா!

Author:
5 August 2024, 4:57 pm

இலங்கையை சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார் .

அங்கிருந்து அவருக்கு நண்பர்களின் மூலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் மிக குறுகிய காலத்திலேயே இளம் தமிழ் வாலிப வட்டத்தின் இடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு வைத்துக் கொண்டு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது .

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த லாஸ்லியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கிளாமராக வலம் வரத் துவங்கிவிட்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடைகளில் எடுத்துக்கொள்ளும் ஹாட்டான போட்டோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். உடல் எடை குறைத்து ஸ்லிம் பின் தோற்றத்திற்கு மாறிய லாஸ்லியா தற்போது படு கவர்ச்சியான உடையில் கிளாமரை அள்ளித் தெளித்து போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்ஸ், “நீ என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் வாய்ப்பு கிடைக்காது” என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!