புனித யாத்திரையில் கண்ணீர் மல்க பிரார்த்தனை..! மெக்காவில் அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட நடிகை மும்தாஜ்..!
Author: Vignesh23 December 2022, 11:00 am
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.
போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜயுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வப்போது தன்னுடைய குடும்பம், ட்ராவல், புதிய போட்டோஷூட் போன்ற பல புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மெக்காவில் இருந்து நடிகை மும்தாஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் `இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு வந்துள்ளதை தான் பாக்கியமாக கருதுவதாகவும், தன்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும், தான் மக்கள் அனைவருக்காகவும் பிராத்தனை செய்வதாகவும், நாங்கள் செய்யும் பாவங்களை மன்னித்து இன்பத்தை தாருங்கள் என்றும் கண்ணீர் மல்க பிராத்தனை செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.