மிஸ் பண்ணிட்டீங்களே! தனக்கு கிடைத்த சூப்பர் ஹிட் பட வாய்ப்பை கவினுக்காக விட்டுக்கொடுத்த பிக்பாஸ் பிரதீப்!

Author: Shree
24 October 2023, 9:38 am

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் சில கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.

இதனிடையே பிரதீப்பின் நண்பர் பிரதீப்பின் நண்பர் ஆஷிக் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பிரதீப் குறித்து பல விஷயங்களை பேசினார். அப்போது கவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடுத்த டாடா திரைப்படம் முதலில் பிரதீப்பிற்கு தான் வந்தது. ஆனால், கவின் இப்படத்தில் நடித்தால் அவனுக்கு நல்ல கெரியர் நிச்சயம் உண்டு.

என்னைவிட அவனுக்கு தான் இப்படம் சிறப்பாக பொருந்தும் எனக்கூறி கவினுக்கு டாடா பட வாய்ப்பை விட்டு கொடுத்தாராம் பிரதீப். அந்தளவுக்கு அவர்கள் இருவரும் நண்பர்கள்” என்று பிரதீப்பின் நண்பர் ஆஷிக் பேசியுள்ளார். அதே போல் பிரதீப்பும் டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபுவும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் இவர்கள் இருவரும் விஸ்காம் படித்தனர். கவினும் அதே கல்லூரியில் தான் படித்தார். ஆனால் அவர் வேறு டிபார்ட்மென்ட்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ