ரிஸ்க் எடுத்து எதிர்பார்த்ததை செய்த ரச்சிதா… வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்.. நெட்டிசன்கள் அட்வைஸ்..!
Author: Vignesh16 February 2023, 5:30 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.
இதற்கு பிறகு பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
தற்போது நடிகை ரச்சிதா சொந்தமாகி வைத்து இருக்கும் ராயல் என்பீல்ட் பைக்கை கையை விட்டுவிட்டு பைக் ஓட்டி சென்ற வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். ரிஸ்க் எடுத்து இப்படி வீடியோ எடுக்க வேண்டாம் ரசிகர்கள் அட்வைஸ் கூறி வருகிறார்கள்.