பிக்பாஸ் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்..- கார் வாங்கியதும் அடித்த அதிர்ஷ்டம்- வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

Author: Vignesh
25 April 2023, 3:30 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

actress-rachitha-mahalakshmi-updatenews360

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

இதற்கு பிறகு பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Rachitha-Mahalakshmi-updatenews360-5

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். அதன்பிறகு புதிய கார் வாங்கியதாக தமிழ் புத்தாண்டில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு டபுள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 653

    2

    0