இங்கிலிஷ் தெரியலன்னு கேலி பண்றாங்க… பிக்பாஸ் ரஞ்சித்திற்கு குவியும் பேராதரவு!

Author:
18 November 2024, 12:28 pm

பிக்பாஸ் சீசன் 8:

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஆரம்பித்தது முதல் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் ஆடியன்ஸ் நாங்கள் இதற்கு முன்பாக பார்த்து ரசித்த பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இந்த நிகழ்ச்சி இல்லை என பிக் பாஸ் 8 மீது வெறுப்படைந்து வருகிறார்கள்.

Bigg boss

இதனிடையே விஜய் சேதுபதி தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து வந்தாலும் கூட மக்களுக்கு என்னவோ பழைய சீசன்களின் மீது இருந்த மோகம் இன்னும் குறையவே இல்லை. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேஷன் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில் இந்த வாரம் வீட்டை விட்டு ரியா வெளியேறி இருக்கிறார் .

வெளியேறிய ரியா:

முன்னதாக இந்த வாரம் தீபக், ஜாக்லின், ஜெஃப்ரி, ரஞ்சித்,ரியா ,சாக்ஷனா ,சத்யா, சிவகுமார் ,சௌந்தர்யா தர்ஷிகா, வர்ஷினி உள்ளிட்டோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருந்தார்கள். அதில் குறைவான வாக்குகளை பெற்று வந்த ரியா தியாகராஜன் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார் .

riya

இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து மிகவும் எமோஷனலாக சிறப்பாக அடுத்தவர்களின் வலியை புரிந்து கொண்டு விளையாடி வரும் நபராக ரஞ்சித் பார்க்கப்பட்டு வருகிறார். வீட்டில் இருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும் வெளியில் அவருக்கு பேராதரவு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரஞ்சித் இங்கிலீஷ் பேச தெரியல என்று சக போட்டியாளர்கள் கிண்டல் செய்வதாக அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. தமிழே தெரியாத சுனிதாவை எவ்வளவோ வரவேற்கிறோம்.

இங்கிலிஷ் தெரியலன்னு கிண்டல்:

rajinth

இதுக்கு முன்னாடி முடிந்த பிக் பாஸ் சீசன்களில் கூட சாக்ஷி ஷெரின் உள்ளிட்டோருக்கு தமிழே தெரியாது தத்தி தத்தி பேசுவாங்க. ஆனாலும் அவங்களுக்கு ஆதரவு கொடுத்தீங்க இது தமிழ்நாடு தமிழ் தெரியலனா கூட நம்ம ஏத்துக்கிறோம் ஆனால் இப்போ இங்கிலீஷ் தெரியலனா கேலி பண்றாங்க அது ஒன்னும் நம் தாய் மொழி இல்லை.

இது குறித்து ரஞ்சித் மனைவி பேசியதாவது முன்ன பின்ன உச்சரிப்பு சரி இல்லைன்னா என்ன இவங்க மட்டும் என்ன ஆக்ஸ்போர்ட் இங்கிலீஷ்லயா பேசுறாங்க? என்கிட்ட வந்து பேச சொல்லுங்க அப்போ தெரியும் என ரஞ்சித் மனைவி பேசியுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!