3-வது திருமணத்திற்கு தயாரான பிரபல சீரியல் நடிகை.. அட்வைஸ் கொடுத்த முன்னாள் கணவர்..!

Author: Vignesh
18 March 2023, 7:15 pm

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா.

இந்த ஆண்டு விமல் நடிப்பில் ஓடிடி வெளியிடாக ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.

இதனிடையே, ‘பாக்கியலட்சுமி சீரியரிலல் ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

reshma pasupuleti - updatenews360

இந்த நிலையில் நடிகை ரேஷ்மா மற்றும் அவரது மகன் ராகுவும் ஒரு ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்தபடி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றனர்.

நடிகை ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவருக்கு, பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

reshma pasupuleti - updatenews360

அதில் அவரது முன்னாள் கணவர் தன்னுடைய மகனை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கி இருப்பதை பார்க்கும் போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், விரைவில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

reshma pasupuleti - updatenews360

இந்த வீடியோ வைரலான நிலையில் ரேஷ்மா 3வது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1469

    2

    6