“ஆபாசமாக பேசி.. அடி ஆட்களுடன் வந்து மிரட்டல்”.. நடிகர் சரவணன் மீது மனைவி பரபரப்பு புகார்..!

Author: Vignesh
13 May 2023, 4:00 pm

நடிகர் சரவணன் பொண்டாடி ராஜ்ஜியம், சந்தோஷம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இளையதளபதி என்ற பட்டத்துடன் வலம் வந்தாலும் இவருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் பருத்தி வீரன் தான். இந்த படத்தில் ஹீரோ கார்த்தியின் சித்தப்பாவாக நடித்து பிரபலமான சரவணன் சமீபத்தில் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

saravanan-updatenews360

அந்த மனுவில், சென்னை முகலிவாக்கத்தில் வீடு வாங்கியதாகவும், இந்த வீட்டை வாங்கி கொடுத்த புரோக்கர், கார்ப்பாக்கிங் பகுதியில், கடை கட்டிவிட்தாகவும், இது குறித்து கேட்டபோது வீடு வாங்கும் போதிதே அந்த கடை இருந்தது என புரோக்கர் தெரிவித்துள்ளதாகவும் இந்த பிரச்சினையை முடித்து கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், நடிகர் சரவணனுக்கு 2 மனைவிகள் உள்ளதாக அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் அவரது விருப்பத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.

saravanan-updatenews360

இதனால் தனக்கும் முதல் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், காலகட்டத்தில் தகராறு அதிகமானதால், தான் முதல் மனைவி வீட்டுக்கு செல்லவில்லை என்றும், அந்த நேரத்தை பயன்படுத்தி புரோக்கர் ராமமூர்த்தி தனது கார்பார்க்கிங்களில் கடை கட்டி அதற்கு மின் இணைப்பும் பெற்றுள்ளார். இது பற்றி கேட்டபோது கார்ப்பார்க்கிங் ஏரியா அவருடையது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து கேட்டபோது ராமமூர்த்தியின் மனைவி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வெட்டுவேன் குத்துவேன் என்று கூறுவதாகவும், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க கோரியும், ராமமூர்த்தி மற்றும் அவருமைய மனைவி ஜெயமணி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளதாக நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.

saravanan-updatenews360

மேலும், இது குறித்து சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ ராமமூர்த்தியின் மனைவி ஜெயமணி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சரவணன் சொல்வது எல்லமே பொய் என்றும், அவர் தன்னையும் ஏமாற்றி நிறைய பிரச்சனைகளை செய்து வருவதாகவும், ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு தன்னிடம் பிரச்சனை செய்வதாகவும், நடிகர் சரவணன் தனக்கு விவாகரத்தே கொடுக்கவில்லை என்றும், அப்புறம் எப்படி 2-வது திருமணம் செய்தார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை என்றும், இங்கு வந்து ரவுடியிசம் செய்து வருவதாகவும், அந்த வீடு தான் சம்பாதித்த பணத்தில் வாங்கியது எனவும், ஆனால் அவர் பெயரில் ரிஜிட்டர் செய்தது தான் செய்த மிகப்பெரிய தவறு எனவும், இந்த வீட்டிற்காக 12 லட்சம் பணம் கொடுத்ததாகவும், மீதி 36 லட்சம் லோன் போட்டு இருப்பதாகவும், அதற்கு இ.எம்.ஐ கூட தான் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

saravanan-updatenews360

மேலும், தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், பருத்தி வீரன் படத்திற்கு பிறகு பிச்சை எடுக்கும் நிலையில் இருந்த நடிகர் சரவணனுக்கு தான் சோறு போட்டதாகவும், இது குறித்து பிக்பாஸில் கூட கூறியிருந்தார் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் விஸ்வரூபம் எடுத்தது வருவது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!