குழந்தை பெற்று தராததால் பிரிந்து வாழும் பிக் பாஸ் சீசன் 6 நடிகை.. அம்பலப்படுத்திய பயில்வான்
Author: kavin kumar25 October 2022, 10:25 am
பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல சீரியல் வாய்ப்பினை பெற்றார்.
சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சினிமா வாய்ப்பின் காரணத்திற்காகவும் சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் வேறொரு தொலைக்காட்சிக்கு தாவி சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.
ரச்சிதா சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
விரைவில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் கூறி வந்த நிலையில், தினேஷ் அப்படியான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரச்சிதா பிக்பாஸ் 6ல் கலந்து கொண்டு வருகிறார். கணவரை விட்டு பிரியவும் சீரியல் நடிப்பது பற்றிய சில விசயங்களை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரச்சிதா.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாகவது, பிக்பாஸில் ரச்சிதா கூறியதுபோல் அம்மாவுக்கு காசுக்கொடுக்காமல் இருக்கவும் குழந்தைக்காக நடிக்க வேண்டாம் என்று கணவர் கூறியதற்கும் தான் பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரச்சிதா.
அதேபோல் குழந்தை பெற்றெடுத்தால் குறைந்தது 6 மாதம் ஓய்வு எடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாலும் வருமானத்திற்காக இதனை மறுத்துவிட்டதால் தான் ரச்சிதா கணவரை விட்டு பிரிந்துள்ளார். மேலும் பிக்பாஸ் ராபர்ட் ரச்சிதாவுக்கு ரூட்டு போட்டும் அதில் விழாமல் இருந்து வருகிறார். ஆனால் இயக்குனர் ஒருவருடன் காதலில் இருந்து திருமணமும் செய்யவுள்ளார் என்ற செய்தியையும் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.