இந்த முறை பிக்பாஸில் மிகப்பெரிய மாற்றம்… கமல் ஹாசனையே ஒரு கலக்கு கலக்கிடும் போலயே!

Author: Shree
6 August 2023, 9:24 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss 7

தற்போது அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் போட்டியாளர் கிட்ட தட்ட ஒரு 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம்.

இந்த சீசனில் உமா ரியாஸ், KPY சரத், தொகுப்பாளர் மாகாபா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள், மற்றும் இசை கலைஞர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களாம். மேலும் இந்த சீஷனுக்கான ப்ரோமோவை கமல் ஹாசன் நடித்து முடிந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. ஆனால் நிகழ்ச்சி துவங்குவதில் தான் சிறு குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ஆம் கமல் தற்ப்போது அடுத்தடுத்து 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். மேலும் ப்ராஜெக்ட் கே படத்திற்காக வெளிநாடுகளுக்கு கூட செல்ல உள்ளதால் நிச்சயம் வார இறுதியில் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதாம். அது சாத்தியமில்லாதது என்பதால் நிகழ்ச்சியை படம் முடித்துவிட்டு வரும் வரை தள்ளிவைக்க சொல்லிவிட்டாராம். இதனால் விஜய் டிவி கொஞ்சம் அப்செட்டில் உள்ளதாம்.

கமல் இதற்கு முந்தைய சீசன்களை விட இதற்கு தான் அதிக சம்பளம் வங்கியுள்ளதாக பேசுச்சுக்கள் அடிபட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசன் சம்பளமாக ரூ.130 கோடி வாங்கியுள்ளாராம். இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக அதிர்ந்துப்போன நெட்டிசன்ஸ், ” இம்புட்டு பணத்தை வாங்கி எங்க அடுக்குறீங்க ஆண்டவரே? என வியந்து கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் குறித்த சுவாரஸ்யமான லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, பிக்பாஸ் சீசன் 7ல் இரண்டு வீடுகள் கொடுக்கப்படுமாம். அதில் போட்டியாளர்கள் இரு பிரிவினராக பிரிக்கப்படுவார்கள். அதன் பின்னர் கடைசியாக ஒரு வீட்டில் ஒன்று சேர்க்கப்பட்டு நிகழ்ச்சி இறுதியில் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பக்காவாக திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய செய்திகள் வெளியாகியுள்ளது.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!