இது உன் வீடு இல்ல… ரீல் மகளை லெப்ட் அண்ட் ரைட்டு விளாசிய விஜய் சேதுபதி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2024, 10:46 am

தமிழ் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸாக கமஸ்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் சாச்சனா தனக்கு அதிக சாப்பாடு தரவில்லை என சண்டை போட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்ஷிதா நான் சாப்பாட்டு விஷயத்தில் எல்லாம் அப்படி செய்ய மாட்டேன் என சாச்சனாவிடம் வாக்குவாதம் செய்ய, பெரிய அளவில் சண்டை முற்றியது.

இது பற்றி கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, இரண்டு பேரின் கருத்துகளை கேட்டு சாச்சனாவை லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார்.

இதையும் படியுங்க: நெல்சன் செய்யும் சம்பவம்…ஒன்று சேரும் தனுஷ் – ஐஸ்வர்யா : ரஜினி ஹேப்பி!

சாச்சனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட விஜய் சேதுபதி, இது என்ன உன் வீடா, உன்னை குழந்தை மாதிரி நடத்த வேண்டும் என நினைக்கிறியா, உனக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டு, பங்கு உண்டு. உனக்கு வேணும்னா நீதான் கேட்கணும், எடுத்துக்கணும், மத்தவங்க உனக்காக செய்வாங்கனு எதிர்பார்க்கக் கூடாது என கடுமையாக விளாசினார்.

அழுது கொண்டே சாச்சனா இதை கேட்டுவிட்டு தவறுதான் என ஒப்புக்கொண்டார். இனி இன்று பிக் பாஸ் வீட்டில் நடந்ததை பற்றி விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu