Romance’ல முழுசா முழ்கிட்டாரேப்பா…. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் ஷாரிக் – வீடியோ!

Author:
23 September 2024, 10:46 am

நடிகர் ரியாஸ் கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனார். இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

ஷாரிக் - வீடியோ - Update News 360

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். கிட்டத்தட்ட 49 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஷாரிக்அதன் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்த மகன் ஷாரிக்கிற்கு அண்மையில் நீண்ட நாள் காதலி மரியா என்பருடன் திருமணம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: உலக அழகின்னு நெனப்பா? செல்ஃபி கேட்ட ரசிகரிடம் சீன் போட்ட பிரியங்கா மோகன் – வீடியோ!

Romance'ல முழுசா முழ்கிட்டாரேப்பா - Update News 360

இத்திருமணத்தில் திரைத்துறையை செய்த நட்சத்திர பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அவ்வப்போது ஷாரிக் தனது இன்ஸ்டாகிராமில் மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் படு ரொமான்டிக்கான வீடியோவுடன் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ரொமான்ஸில் மூழ்கிக் கிடக்கிறாரே ஷாரிக் என கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 334

    0

    0