குவின்ஸியிடம் அத்துமீறிய கோலார்: தனலட்சுமி இருந்துட்டு போகட்டும், இவரை மொதல்ல விரட்டுங்க பிக்பாஸ்..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
17 October 2022, 11:30 am

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் குவின்ஸியிடம் அசல் கோலார் நடந்து கொண்ட விதம் தான் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விக்ரமனிடம் குவின்ஸி பேசிக் கொண்டிருந்தபோது அவரின் கையை தடவிக் கொண்டே இருந்தார் அசல். இவன் வேற என்று கடுப்பான குவின்ஸி அதை கண்டுகொள்ளாமல் விக்ரமனிடம் தொடர்ந்து பேசினார்.

அசலும் தொடர்ந்து குவின்ஸியின் கையை தடவிக் கொண்டே இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே குவின்ஸியின் நிழல் போன்று அவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார் அசல்.

குவின்ஸியுடன் இருக்கத் தான் இந்த கோலாரு பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததா என்றார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் தான் அவர் குவின்ஸியின் கையை தடவும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

Bb_updatenews360 1

உங்களை நம்பி தானே பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் வருகிறார்கள். அவர்களை இந்த கோளாறு பிடித்த கோலாரு போன்ற ஆட்களிடம் இருந்து பாதுகாப்பது உங்களின் பொறுப்பு.

தயவு செய்து இந்த கோலாரு பையனுக்கு தண்டனை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் தனலட்சுமி இருந்துட்டு போகட்டும், இவரை மொதல்ல விரட்டுங்க பிக்பாஸ் என்று கோலாரு வீடியோவையும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…
  • Close menu