அதகளம் பண்ண ரெடியா? எதிர்பார்த்த நேரத்தில் பிக்பாஸ் சீசன் 7 அப்டேட் வந்தாச்சு!

Author: Shree
18 August 2023, 4:43 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். சற்றுமுன் இந்த சீசனின் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், இன்று சாயங்காலம் 7:7 மணிக்கு ரெடியா இருங்க என்று கூறியுள்ளனர். இது கமல் நடித்த புரோமோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!