காசு பணம் துட்டு மணி மணி.. பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்..!

Author: Vignesh
5 January 2024, 9:58 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

kamal

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7 tamil-updatenews360

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

தற்போது, நடைபெற்று வரும் பிக்பாஸ் 7 இல் உள்ள சில போட்டியாளர்கள் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறத் திட்டம் போட்டு வைத்து விட்டனர். விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர்தான் பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என கூறப்பட்டது.

bigg boss 7 tamil-updatenews360

இன்றைய பிரமோ வீடியோவில் 16 லட்சம் மதிப்பில் பணப்பெட்டி காட்டப்பட்டது. இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து பிக்பாஸ், பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம், குறையலாம் என்று தெரிவித்து இருந்தார். பணப்பெட்டியை யார் எடுப்பார் என்று போட்டியாளர்கள் ஆளுக்கொரு பெயரை அடுக்கி வந்தநிலையில், இன்றைய பிரமோ வீடியோவில் 12 லட்சம் மதிப்பில் பணப்பெட்டி காட்டப்பட்ட நிலையில், இந்த பெட்டியை எடுக்க போட்டியாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

bigg boss 7 tamil-updatenews360

ஒருசிலர் இணையத்தில் விசித்ரா பணப்பெட்டி எடுப்பார் எனவும், மறுபக்கம் மணி எடுப்பார்? அவர் எடுக்கவில்லை என்றால் பூர்ணிமா எடுப்பார் என்றும் தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது, வந்த தகவலின் படி பூர்ணிமா 16 லட்சம் மதிப்புள்ள பணபெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாராம்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!