வரட்டா.. பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக்பாஸில் நடந்த ட்விஸ்ட்..!
Author: Vignesh3 January 2024, 2:32 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.
தற்போது, நடைபெற்று வரும் பிக்பாஸ் 7 இல் உள்ள சில போட்டியாளர்கள் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறத் திட்டம் போட்டு வைத்து விட்டனர். விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர்தான் பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என கூறப்பட்டது.
இன்றைய பிரமோ வீடியோவில் ஒன்பது லட்சம் மதிப்பில் பணப்பெட்டி காட்டப்பட்டது. ஆனால், நேற்று இரவு 13 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி வந்ததாகவும், பலரும் இன்னும் விலை உயரட்டும் என்று காத்திருந்து வந்த நிலையில், விசித்திரா அந்த சூப்பரான சம்பவத்தை செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சுரேஷ் தாத்தாவிடம் கேள்வி கேட்க அவர் மீது வைத்த நம்பிக்கையை வின் அடித்து விட்டார் என்றும், டைட்டில் நமக்கு கிடையாது என்று இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது நல்ல விஷயம் தான் என்று கூறியிருக்கிறார். அவர் பின்னால் இருந்த பிரதீப் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறும் ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார். ஆனால், விசித்ரா தான் பணப்பெட்டியை எடுத்தாரா என்று இன்று இரவு எபிசோடில் தான் தெரிய வரும்.