சும்மாவே வீடு ரெண்டாகும்… இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… அட்டகாசமான பிக்பாஸ் Promo வீடியோ!

Author: Shree
25 August 2023, 8:19 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

7 , kamal

7வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசனின் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் கமல் டபுள் ஆக்ஷனில் காருக்குள் அமர்ந்தபடி ஆரம்பிக்கலாமா? என்று ஸ்டார்ட் பண்ணுறார் “சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… இன்னும் என்னென்ன ஆகுமோ? என ஆண்டவர் தன்னுடைய ஸ்லாங்கில் பேசி அதகளம் பண்ணிவிட்டார். இதோ அந்த வீடியோ:

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி