பிக்பாஸ் சீசன் 8-ல் களமிறங்கும் போட்டியாளர்கள்: 3 சர்ச்சைப் பிரபலங்களும் செல்வது உண்மையா?..
Author: Vignesh18 July 2024, 2:21 pm
படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் பக்கம் வந்த பிக்பாஸ் அப்படியே தென் இந்திய சினிமாவிற்கும் பல வருடங்களுக்கு முன்பே வந்தது என்று சொல்லலாம். முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்து அப்படியே அடுத்தடுத்த சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
விரைவில், பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 குறித்த சில தகவல்கள் சமூக வலைதளங்களை உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போது, களைக்கட்ட போகும் சீசனை 8 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தான் வந்திருக்கிறது.
முன்னதாக, போட்டியாளர்களின் ஆடிஷன் இப்போது நடந்து வருகிறதாம். அப்படி சீசன் 8-ல் வரப்போகும் பிரபலங்கள் யார் என வளம் வரும் லிஸ்டில் ரியாஸ்கான், பூனம் பாஜ்வா, குக் வித் கோமாளி புகழ், அஸ்வின், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக், பப்லு பிரிதிவிராஜ், பாடகி ஸ்வேதா மேனன், பாடகி கல்பனா, அமலா சாஜி, சோனியா அகர்வால், நடிகை கிரண், ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா என பல பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டுள்ளது.