அய்யயோ.. இவங்க பேசியே காலி பண்ணுவாங்களே.. பிக்பாஸ் சீசன் 8 க்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரம்..!
Author: Vignesh20 August 2024, 4:31 pm
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக திகழ்ந்த கமலஹாசன் பிக் பாஸ் பயணத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதை அடுத்து, பிக் பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்கும் பிரபலம் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஒவ்வொரு பிக் பாஸ் ரசிகர்களின் மனதிலும் எழுந்தது.

கடந்த ஏழு சீசன்களை பொறுத்தவரை கமல் பங்கு பெறாத சில பிக்பாஸ் எபிசோடுகளை நடிகர் சிம்பு மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடத்தி இருந்தனர். ஆகவே அடுத்த சீசனை அவர்கள் தான் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தற்போது கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது போட்டியாளர்கள் யார் யார் என்ற ஒரு லிஸ்ட் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
குக் வித் கோமாளி ஷாலின் ஷோயா மற்றும் அவரது காதலர் TTF வாசன், அஸ்வின் மற்றும் சிவாங்கி, பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களான அருண் மற்றும் ஃபரினா அசாத் உள்ளிட்ட ஜோடிகளை களம் இறக்க உள்ளார்களாம். மேலும், ஒரு சிலரின் பெயர்களும் இந்த லிஸ்டில் அடிப்படுகிறது.