விஜய் சேதுபதியிடம் நேருக்கு நேராக கேட்கணும்… பிக் பாஸ் வீட்டுக்குள் டுவிஸ்ட் வைத்த போட்டியாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2024, 3:44 pm

70 நாட்களை கடந்து பிக் பாஸ் தமிழ் சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 5 வாரமே மீதி உள்ளது.

யார் பிக் பாஸ் வின்னராக போகிறார் என்பதை காண மக்கள் ஆவலோடு உள்ளனர். இந்த நிலையில் முத்துக்குமரன் வீட்டுக்குள் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

Muthu kumaran Bigg Boss

அந்த வீடியோவில், “இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த பிறகு, சேது அண்ணனிடம் உரிமையுடன் கேட்க வாய்ப்பு கிடைத்தால், ஒரே கேள்வி கேட்பேன். அதாவது, ‘இயக்குனர் வெற்றிமாறனிடம் சினிமாவை கற்றுக்கொள்ள என்னை சேர்த்து விடுவீர்களா?’ என்று நான் சாச்சனாவிடம் சொன்னேன்,” என்று முத்து தெரிவித்துள்ளார்.

இது நடக்குமா நடக்காதா என்பது விஜய் சேதுபதி கையில்தான் உள்ளது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!