கைதட்டி திருநங்கை Shivin-ஐ அசிங்கப்படுத்திய BB போட்டியாளர்: ரெட் கார்டு கொடுத்தே ஆகணும் ஆண்டவரே நெட்டிசன்ஸ் வேண்டுகோள்..!
Author: Vignesh28 October 2022, 12:39 pm
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாடு பார்க்கும் ஒரு ஷோ. அதில் பங்குபெறுகிறோம் என்றால் நாம் மிகவும் ஒழுங்காக இருக்க வேண்டும்.
ஆனால் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் அசீம் செய்யும் சில விஷயங்கள் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகரான அசீம், தன்னை ஹீரோ போல் நினைத்துக்கொண்டு ஏதேதோ செய்து வருகிறார். டாஸ்க்குகளில் சக ஹவுஸ்மேட்டுகளிடம் அவர் பேசும் விதமும் நடந்து கொள்ளும் விதமும் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது.

நேற்றைய எபிசோடில் அமுதவாணன், தனலெட்சுமி, விக்ரமன் மற்றும் ஷெரினிடம் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது. அடுத்தவர்களை வெறுப்பேற்றுவதாக நினைத்து தனது நிலையை இழந்து அவர் நடந்து கொள்வதை பார்த்த நெட்டிசன்கள் அவரை சைகோ என திட்டி வருகின்றனர்.
திருநங்கையான ஷிவ்வினின் உடல் மொழியை கேலி செய்யும் வகையில் கைகளை தட்டியும் உடலை வளைத்தும் உதட்டை சுழித்தும் அசிங்கப்படுத்தினார் அசீம். இதேபோல் அமுதவாணனிடமும், விக்ரமனிடமும் கேவலமான உடல் மொழியை காட்டி வெறுப்பேற்றினார். ஆனால் அசீம்மின் இந்த நடவடிக்கைகளை பார்த்த நெட்டிசன்கள் அவர் மீது தான் வெறுப்பை கக்கி வருகின்றனர்.
அசீம்மின் மனைவி அவரை விவாகரத்து செய்தது ஏன் என்று தற்போது தெரிந்துவிட்டது என்றும் அவர்தன்னை ஹீரோவாக நினைத்து ஏதேதோ செய்கிறார், ஆனால் அவர் காமெடியான இருக்கக்கூட தகுதியில்லை என்றும் சாடி வருகின்றனர் நெட்டிசன்கள். சமூக வலைதளங்களில் அசீமை திட்டும் பலரும் கமல் இந்த வாரமாவது அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா என கேட்டு கமலின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே மிகவும் மோசமான எரிச்சலூட்டும் போட்டியாளர் என்றால் அது அசீம்தான் என்றும் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அசீமை திட்டும் பலரும் கமல் இந்த வாரமாவது அவர் மீது நடவடிக்கை எடுப்பாரா என கேட்டு கமலின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்து வருகின்றனர்.