பிக் பாஸ் வீட்டில் களேபரம்… வாடா, போடா என நா கூசும் அளவிற்கு எல்லை மீறிய தனலட்சுமி.. அடிக்க பாய்ந்த மணிகண்டன்!!

Author: Vignesh
9 November 2022, 3:45 pm

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நவம்பர் 9ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோவில் தனலட்சுமி மணிகண்டனை போடா என அழைக்க புதிய பிரச்சனை சண்டை சச்சரவோடு ஆர்ப்பாட்டமாக தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே கமல் வாடா போடா என அழைக்க யாருக்கும் உரிமை இல்லை என வார்னிங் கொடுத்தாலும் தற்போது தனலட்சுமி செயல் குறித்து நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக இருந்து வருகிறது.

காதே கிழிந்து விடும் சத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக ஒவ்வொரு டாஸ்க்மே சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தும் டாஸ்காக தான் இருந்து வரும். அந்த வகையில் தற்போது பேக்கரி டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இருஅணிகளாக போட்டியாளர்கள் ஸ்வீட் கடையை நடத்தி வருகின்றனர் .

BB - updatenews360

அதில் தங்களுடைய அணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் வெறிகொண்ட வேங்கைகளாக விளையாடி வருகின்றனர். மாறி மாறி போட்டியாளர்கள் குறை கூறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் சண்டையில் காதே கிழிந்து விடும் அளவிற்கு கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாராவாரம் ஒரு சண்டை

இந்த சீசனில் ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு டாஸ்க் தொடங்கும் போதும் ஒரு சண்டை நடந்து விடுகிறது. முதல் வாரமே தனலட்சுமி மற்றும் ஜி பி முத்து சண்டை ரசிகர்களை புருவத்தை சுருக்கி பார்க்கும் அளவில் இருந்தது. ஜி பி முத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு தனலட்சுமி ஜிபி முத்துவோடு சண்டை இட்டதும் ஒரு காரணம் என்று சிலர் இப்ப வரைக்கும் கருத்து கூறி வருகின்றனர்.

BB - updatenews360


அடுத்த வாரம் தனலட்சுமி மற்றும் அசீம் இடையே காரசாரமான சண்டை காரணமாக குறும்படம் வரைக்கும் சென்றது. இந்த நிலையில் இந்த வாரம் மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. தொடங்கியது புது சண்டை பிக் பாஸ் கொடுக்கும் பொருட்களை இரண்டு அணி போட்டியாளர்களும் போட்டி போட்டு பெற்று அதை தங்களுடைய பெஸ்ட் ஆக ஸ்வீட் மூலம் செய்து மார்க்குகளை அள்ளிக் கொண்டிருக்கின்றனர் .

BB - updatenews360

அந்த வகையில் இன்று ஸ்வீட் செய்வதற்கான பொருள்கள் வந்து கொண்டிருக்கிறது .அதில் தனலட்சுமி கையில் ஒரு பாக்ஸ் கிடைத்திருக்கிறது. அதை தள்ளிவிட்டு மணிகண்டன் தனலட்சுமி கையில் இருந்து பாக்ஸை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். அனைத்து போட்டியாளர்களும் மணி அதை கொடு என்று கேட்டாலும் அவர் யாருக்கும் கொடுக்காமல் நடந்து கொண்டிருக்கிறார் .

மீண்டும் வாடா போடா

BB - updatenews360

கடும் கோபமான தனலட்சுமி நான் எடுப்பேன் அமுது என் கையில் இருந்து மணி பிடுங்கிக் கொண்டு வருகிறார் என்று தன்னுடைய டி-ஷர்ட் கையை முட்டி வரை சுருக்கி கோபத்தில் கத்துகிறார் .அமுது எவ்வளவோ சமாதானம் செய்தாலும் கேட்காத தனலட்சுமி மற்றும் மணிகண்டன் கத்தி கொண்டு இருக்கின்றனர். அவன் தள்ளிவிட்டதால் நான் எப்படி விழுந்தேன் தெரியுமா? என தனலட்சுமி கத்துகிறார்.
அதை கேட்ட மணிகண்டன் என்னது டாவா? டாவா? என்று என்ன சத்தம் போடுகிறார். உனக்கு என்ன வயசு? என கத்தி கூச்சல் போட்டபடி தனலட்சுமி அருகில் நெருங்கி வருகின்றார். போட்டியாளர்கள் மணிகண்டனை சமாதானம் செய்து கொண்டிருக்கின்றனர் .தனலட்சுமி மற்றும் மணிகண்டனை போட்டியாளர்கள் இரு பக்கமாக பிரித்துக் கொண்டு சென்றாலும் மணிகண்டன் ஓடி சென்று ஸ்வீட் பாக்ஸ் தூக்கி என்ன வேணும் என்று கேட்கிறார். இந்த ப்ரமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 491

    0

    0