என் கிட்டயே உன் வேலையை காட்டறியா? முத்துக்குமரனை விளாசிய பிக் பாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2024, 4:35 pm

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் யார் என்பதற்கான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்கின் போது, கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படவேண்டிய போட்டியாளர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும்.

முத்துக்குமரன் செய்த வேலை : கடுப்பான பிக்பாஸ்

இந்த போட்டியில், ஒருவரும் மற்றவருக்குப் பிடிக்க வேண்டிய கட்டளை இல்லை. அதாவது, “இவர் தான் கேப்டனாக வேண்டும்” என்று விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது விதி.

இதையும் படியுங்க: நடிகை ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீங்களா? விளாசும் பிரபலம்!!

ஆனால், இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்கில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களை விட்டுக் கொடுத்து விளையாடியதால் பிக்பாஸ் கடுப்பாகி விட்டது.

இதன் காரணமாக, கேப்டன்சி டாஸ்க் மட்டும் இல்லாமல், இறுதிப் போட்டிக்கான பாஸ் பெறுவதும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த சுவாரஸ்யமான சம்பவம் காரணமாக, முத்துக்குமரன் கதறி அழுவதை மையமாக கொண்டு பரபரப்பான ப்ரோமோ வெளியாகி தற்போது நெட்டிசன்களின் விமர்சனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

மற்றொரு ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்காகவும், முத்துக்குமரன் மன்னிப்பு கேட்டு பிக்பாஸிடம் முறையிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?