அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு..வாயை கொடுத்து வாங்கி கட்டிய பிக் பாஸ் சௌந்தர்யா!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2025, 6:32 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே நுழைந்துள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் உள்ள டாப் 8 போட்டியாளர்களுக்கும், மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த பழைய போட்டியாளர்களுக்கும் போட்டி நடந்து வருகிறது.
அதில் சௌந்தர்யாவுக்கு கில்லி பட திரிஷா கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டது. சிவாஜி பேரன் சிவக்குமாருக்கு மங்காத்தா அஜித் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
அப்போது சௌந்தர்யாவும், சிவ்குமாரும் பேசிக் கொண்டிருந்த போது, சௌந்தர்யா அஜித் குறித்து தேவையில்லாததை பேசினார்.
இதையும் படியுங்க: COME BACK கொடுத்தாரா சங்கர்…”கேம் சேஞ்சர்”படத்தின் திரை விமர்சனம் இதோ…!
அதாவது, எப்ப சார் ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்போம், உங்களுக்கு வேற வயசாகிட்டே போகுது, ஆனா நடிச்சிட்டே இருக்கீங்க. பைக்கை எடுத்திட்டு எங்கேயோ போனீங்களே? திரும்பி வந்திட்டீங்களா என சிவ்குமாரை பார்த்து கேட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் சௌந்தர்யாவுக்க எதிராக ஹேஷ்டேக் போட்டு எதிர்ப்பு கூறி வருகின்றனர்.
இது சௌந்தர்யாவுக்கு ஒரு கருப்பு புள்ளி போல உள்ளதால் அவருடைய பிக் பாஸ் வாக்குகளில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது.